உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் : பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க  -  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் :  பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை பின்பற்றிட தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் அறிந்திடவும் மற்றும் புகார்கள் தெரிவித்திடவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி 1800 425 8510 அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிஷிவந்தியம் 04151-239 223, திருக்கோவிலூர் 04153-252 650, திருநாவலூர் 04149-224 221, உளுந் தூர்பேட்டை 04149-222 238, கள்ளக்குறிச்சி 04151-222 371, சின்ன சேலம் 04151-236 235, சங்கராபுரம் 04151-235 223, தியாகதுருகம் 04151-233 212 மற்றும் கல்வராயன்மலை 04151-242 229 ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இத்தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தகவல் மற்றும் புகார்களை தெரிவித்திடலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in