

திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நேற்று முன்தினம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் நடத்திய சோதனையில் மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கோபிநாத் (45), துரைராஜ் (43), பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன்(37), அகஸ்டின்ராஜ்(29), சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ஜான் பாஸ்கோ(35), குமார்(36), ரங்கம் வீரேஸ்வரத்தைச் சேர்ந்த சுரேஷ்(41), கீழ சிந்தாமணியைச் சேர்ந்த லட்சுமணன் (35), கீழ தேவதானத்தைச் சேர்ந்த பிரபு (34), எடத்தெருவைச் சேர்ந்த ஜெகதீசன்(47), வரகனேரி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த முகமது ஜாகீர் உசேன்(24) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ரங்கம் அம்மா மண்டபத்தைச் சேர்ந்த சுதாகர் (36), தெப்பக்குளத்தைச் சேர்ந்த ஹரிகரசுதன்(24), சரவணன் (22), இந்திரா நகரைச் சேர்ந்த சூர்யா(19) ஆகியோரை கைது செய்தனர்.