

கோபி அருகே டீக்கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து. 32 பவுன் தங்கநகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். கோபி நீதிமன்றம் அருகே டீக்கடை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்ற துரைராஜ், இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 32 பவுன் தங்கநகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
கோபி போலீஸார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.