

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எஸ்ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, வர்த்தகரெட்டிப்பட்டி அருகே உள்ள தலைவன் குளத்தில் சிலர் ஜேசிபி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் சட்ட விரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அருள்மணி மகன் யோகாபிரவின் ஜேம்ஸ் (24), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் சர்மா மகன் லோகேஷ் குமார் சர்மா (28) மற்றும் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயகண்ணன் (45) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம், டாரஸ் லாரி மற்றும் 3 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தட்டப்பாறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.