

வேலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் வரும் 29-ம் தேதி நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் பாது காக்கப்பட்டு வருகின்றன. இதில், நீதிமன்றங்கள் மூலம் வழக்கு முடிந்தும் அதில் தொடர்புடைய 528 வாகனங்கள் யாரும் உரிமை கோராததால் அந்த வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வரும் 29-ம் தேதி (புதன்கிழமை) வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்’’ என்றனர்.