ரூ.5 லட்சம் மதிப்பிலான : பான் மசாலா பறிமுதல் :

ரூ.5 லட்சம் மதிப்பிலான  : பான் மசாலா பறிமுதல் :
Updated on
1 min read

தி.மலை நகரம் மண்டித் தெரு பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, லாரி பார்சல் அலுவலகம் அருகே முகவரி குறிப்பிடாமல் வைக்கப்பட்டி ருந்த 5 பண்டல்களை கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா இருந்தது உறுதியானது.பான் மசாலா வாசனை வெளியே தெரியாமல் இருக்க,ஊதுபத்திகளை அடுக்கி நூதனமாக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து லாரி பார்சல் சர்வீஸ் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டதில், பான் மசாலா பொருட்கள், எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்து, லாரி பார்சல் சர்வீஸில் உள்ள ஒரு அறையில் 5 பான் மசாலா பண்டல்களையும் பாதுகாப்பாக வைத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் பூட்டினர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in