பேரறிவாளனுக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு  :

பேரறிவாளனுக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு :

Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த மே மாதம் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி உள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் மருத்துவ சிகிச்சையின் காரணமாக அவருக்கு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 3 முறை பரோல் நீட்டிப்பு தரப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளனின் உடல் நிலை மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சையை கருத்தில் கொண்டு அவருக்கு 4-வது முறையாக 30 நாட்களுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in