3 பேரின் மனு தள்ளுபடி, ஒருவர் வாபஸ் எதிரொலி - நடுக்கோம்பை ஊராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு :

3 பேரின் மனு தள்ளுபடி, ஒருவர் வாபஸ் எதிரொலி -  நடுக்கோம்பை ஊராட்சி  தலைவர் போட்டியின்றி தேர்வு  :
Updated on
1 min read

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுக்கோம்பை ஊராட்சித் தலைவராக இருந்த அழகப்பன் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அக்.,9-ம் தேதி இதற்கான தேர்தல் நடக்கயிருந்தது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு திமுக பிரமுகரும், உதயநிதி ரசிகர் மன்ற தலைவருமான விஜயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், சின்னப்பையன், செல்லாகவுண்டர், அருண் ஆகியோரும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் முருகேசன்,சின்னப்பையன், செல்லாகவுண்டர் ஆகியோரின வேட்புமனுக்களுடன் தேவையான ஆவணங்கள் இணைக்கப் படாததால் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், அருண் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து திமுக பிரமுகர் விஜயபிரகாஷ் நடுக்கோம்பை ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in