கரோனா தடுப்பூசி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை :

கரோனா தடுப்பூசி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை  :
Updated on
1 min read

தடுப்பூசி மையப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும், என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் பணிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஈடுபடுத்துவதால் பல்வேறு வகைகளில் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து பள்ளி ஆசியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த 12, 19-ம் தேதிகளில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் விடுப்பு விதிகளின் படி ஈடுசெய் விடுப்பு அனுமதிக்க வேண்டும்.

தடுப்பூசி மையப்பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடச் செய்வதால் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இன்று (26-ம் தேதி) நடைபெறும் தடுப்பூசி முகாமில் இருந்து பள்ளி ஆசிரியர்களை விடுவித்து உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in