சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு :

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு    :
Updated on
1 min read

பரமத்தி வேலூரில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.

பரமத்தி வேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் புதூர் தெருவில் மணி என்பவருக்குச் சொந்தமான வீடு இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணியில் அதே பகுதியைச் சேர்ந்த அமீர்கான் (16) என்ற சிறுவன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் மீது கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சிறுவனின் தந்தை ரஹீம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். அதன்பின்னர் குடும்ப பொறுப்பை கவனித்து வந்த சிறுவன் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in