

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ.அருண் ஆயுதப்படை ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக இருந்த க.கார்த்திகேயன் திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற க.கார்த்திகேயனுக்கு துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, ‘‘திருச்சி மாநகரில் இனி ரவுடிகள் நடமாட்டம் இருக்கக்கூடாது. காவலர்கள் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மக்களிடத்தில் காவல்துறை குறித்த தவறான எண்ணம் வராத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியக்கூடிய காவலர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.