

திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுபட்ட தேர்தல் அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத் தூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள் ளது. இதற்காக, தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் (24-ம் தேதி) 6 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நாளை (27-ம் தேதி) காலை 10 மணிக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில், விடுபட்டவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதியின் கீழ் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.