மத்தூர் அருகே 3 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் :

மத்தூர் அருகே 3  நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் குள்ளம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் கணேசன் (35) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் உரிமம் இல்லாத 3 நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரிந்தது. 3 நாட்டு துப்பாக்கிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in