மொடக்குறிச்சி அருகே குளிர்பான ஆலையை தடை செய்ய அரசுக்கு கோரிக்கை :

மொடக்குறிச்சி அருகே குளிர்பான ஆலையை  தடை செய்ய அரசுக்கு கோரிக்கை :
Updated on
1 min read

மொடக்குறிச்சியை அடுத்த செல்லாத்தாபாளையத்தில் அமையவுள்ள குளிர்பானத்தொழிற்சாலையை தடை செய்யவேண்டும் என்று அருந்ததியர் இளைஞர் பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவையின் தலைவர் வடிவேல்ராமன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா ஆனந்தம்பாளையம் ஊராட்சி செல்லாத்தாபாளையம் பகுதியில் அனுமன்நதியையொட்டி, 3 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனத்தினர் குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டும்பணியை தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொழிற்சாலையின் அருகில் உள்ள செல்லாத்தாபாளையத்தில் காலனிக்கு உட்பட்ட காலியிடத்தை ஆக்கிரமித்து, வேலி அமைத்துள்ளனர்.

மேலும் இங்கு அரசு சார்பில் குடிநீருக்காக ஆழ்குழாய் கிணற்றின் அருகிலேயே, தனியார் நிறுவனத்தினர் 1000 அடிக்கும் மேல் ஆழத்தில் போர்வெல் அமைத்துள்ளனர். இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமும், குடிநீருக்கான நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இந்நிறுவனத்தின் கட்டிடப்பணிகளுக்கு தடைவிதிக்கவேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in