

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெங்கமேட்டூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், அரவக்குறிச்சி போலீஸார் நேற்று முன்தினம் இரவு அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, 9 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10,66,640 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.