திருவள்ளூரில் நாளை ஏற்றுமதியாளர் கூட்டம் :

திருவள்ளூரில் நாளை ஏற்றுமதியாளர் கூட்டம் :
Updated on
1 min read

திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள், பொறியியல் பொருட்கள், தானியங்கி வாகனம்மற்றும் வாகன உதிரி பாகங்கள், ரசாயனப் பொருட்கள், நெகிழிபொருட்கள், பருப்பு மற்றும்பருப்பு சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வசதியாக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் 2022-ல் நிறைவு பெறுவதையொட்டி மத்திய வர்த்தக அமைச்சகம் செப். 20 முதல் 26 வரைவர்த்தக வாரமாக கொண்டாடுகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட ஏற்றுமதி வசதியாக்க குழு ஏற்பாட்டில் நாளை காலை 10.30 மணிக்கு, திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in