டிஎன்பிஎல், வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் :

டிஎன்பிஎல், வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் :
Updated on
1 min read

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவ னம்(டிஎன்பிஎல்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்கக சுற்றுச்சூழல் அறிவியல் துறை ஆகி யவை இணைந்து, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறை, தென்னை சாகுபடியில் நிலையான விளைச்சலுக்கான மேலாண்மை தொழில் நுட்பங்கள், தீவன தரம் மற்றும் கால்நடை மேலாண்மை எனும் தலைப்பு களில் புகழூர் மூலிமங்கலம் சமுதாயக் கூடத்தில் விவசாய பயிலரங்கத்தை அண்மையில் நடத்தின.

இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்கக இயக்குநர் அர.சாந்தி தலைமை வகித்து, ஒருங்கி ணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறை மற்றும் மண்வளம், மண் பரிசோதனை முறை மற்றும் உரமிடும் முறை குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறு வன செயல் இயக்குநர் எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசினார்.

தொடர்ந்து, சுத்திகரிக்கப்பட்ட காகித நிறுவன கழிவுநீர் மேலாண்மையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பங்கு குறித்து சூழலியல் துறை தலைவர் மு.மகேஸ்வரி விளக்கினார். தென்னை மரத்தில் பூச்சி தாக்குதல் மற்றும் மேலாண்மை குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் க.ராஜமாணிக்கம், கால்நடை கொட்டகை அமைப்பு மற்றும் கால்நடை இனம் தேர்ந்தெடுப்பு குறித்து கால்நடை மருத்துவர் ம.திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.

முன்னதாக, சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் பெ.தங்கவேல் வரவேற்றார். முடிவில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன உதவி மேலாளர் வ.பிரசாத் நன்றி கூறினார். இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.l

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in