

இந்த ஆண்டு தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சி.மதளைசுந்தரத்தின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கல்லூரியை வழிநடத்துதல், ஆராய்ச்சி, தரமான கல்வி வழங்குதல், ஆராய்ச்சிக் கட்டுகரைகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பலகட்டப் பரிசீலனைக்குப் பின் சிறந்த முதல்வர் விருதுக்குத் தேர்வானார்.இந்த விருதை அமைப்பின் தலைவர் கருப்பசாமிராமநாதன், இயக்குநர் லட்சுமிநரசிம்மன் ஆகியோர் வழங்கினர்.
விருதுபெற்ற முதல்வர் மதளைசுந்தரத்தை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் உட்பட பலர் பாராட்டினர்.