ஈரோட்டில் ‘லோகோ பைலட்’ சங்கத்தினர் உண்ணாவிரதம் :

ஈரோட்டில் ‘லோகோ பைலட்’ சங்கத்தினர் உண்ணாவிரதம் :
Updated on
1 min read

ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ஈரோடு ரயில் நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சேலம் கோட்ட தலைவர் சந்திரமனோகர் தலைமை தாங்கினார்.

ஈரோடு கிளை செயலாளர் அருண்குமார் வரவேற்றார். தென் மண்டல துணைத் தலைவர் முருகேசன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். உண்ணாவிரதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். இரவு பணிக்கான படியை நிறுத்த கூடாது. வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கரோனாவால் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in