

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், மண் அரிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று அங்கு சீர் செய்யும் பணி நடைபெற்றது. இதனிடையில், சாலையின் தரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம்: எஸ்.குரு பிரசாத்