தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல்நகர்- கோக்கூர் இடையே  தேங்கியுள்ள மழைநீரில் செத்து மிதந்த மீன்கள்.                   படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல்நகர்- கோக்கூர் இடையே தேங்கியுள்ள மழைநீரில் செத்து மிதந்த மீன்கள். படம்: என்.ராஜேஷ்

தேங்கிய மழை நீரில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி :

Published on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர்- கோக்கூர் இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தண்ணீர் குளம்போல தேங்கியது. இந்த தண்ணீர் கடந்த ஓராண்டாக வடியாமல் அப்படியே நிற்கிறது. தேங்கிய தண்ணீரில் ஏராளமான மீன்கள் காணப்பட்டன. குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களும் சேர்ந்துதண்ணீர் மாசடைந்து காணப்பட்டது.

இந்நிலையில், இங்கு ஏராளமான மீன்கள் நேற்று காலை செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அருகே அங்கன்வாடி மையம்மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள்மிகுந்த அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால், நேற்று மாலை வரை இறந்து கிடந்த மீன்கள் அகற்றப்படவில்லை. இறந்த மீன்களை உடனடியாக அகற்றி, அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என, அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in