

பெரம்பலூர் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பேச்சியம்மாள்(70). நேற்று பெரம்பலூருக்கு வந்த இவர், மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்ல பெரம்பலூரிலிருந்து பொன்னகரம் செல்லும் அரசு நகர பேருந்தில் ஏறினார்.
அந்தப் பேருந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, பேச்சியம்மாள் முன்பக்க படிக்கட்டு அருகே சென்று எச்சில் துப்ப முற்படும்போது, பேருந்திலிருந்து சாலையில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.