இலவச தையல் பயிற்சிக்கு இன்று நேர்காணல் :

இலவச தையல் பயிற்சிக்கு இன்று நேர்காணல்  :
Updated on
1 min read

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபி-யின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கு அளிக்கப்படவிருக்கும் தையல் கலை பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் இன்று(செப்.22) நடைபெற உள்ளது.

பயிற்சியின் கால அளவு 30 நாட்கள். பயிற்சி காலத்தில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர 18 முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இன்று (செப்.22)நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் மைய இயக்குநரை அணுகலாம், நாளை (செப்.23) முதல் பயிற்சி தொடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in