குன்னத்தூரில் பவுர்ணமி கிரிவலம் :

திருநெல்வேலி அருகே  குன்னத்தூரில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
திருநெல்வேலி அருகே குன்னத்தூரில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி அருகேயுள்ள தென்திருவண்ணாமலை என்றழைக்கப்படும் குன்னத்தூரி லுள்ள மலையைச் சுற்றி 6 கி.மீ. தொலைவுக்கு பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது.

நவ கைலாய கோயில்களில் ராகு தலம் என்றழைக்கப்படும் சங்காணி கோத பரமேஸ்வரர் கோயிலில் இருந்து, மாலை 4.30 மணிக்கு கிரிவலம் தொடங்கியது. அங்கிருந்து தென்திருப்பதி என்றழைக்கப்படும் மேலத்திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி டவுனுக்கு செல்லும் வழியில் 4 முக்கு, மேலக்குன்னத்தூர், கீழ குன்னத்தார் வழியாக மீண்டும் சங்காணி கோத பரமேஸ்வரர் ஆலயத்தில் நிறைவடைந்தது. பின்னர், பக்தர்கள் சார்பில் மலை உச்சியில் உள்ள ராமர் பாதம் அருகே ஜோதி ஏற்றப்பட்டது.

நகராட்சி முன்னாள் தலைவர் வெங்கடசுப்பிரமணியன், இந்துமுன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், மாவட்டச் செயலாளர் சுடலை, வியாபாரிகள் சங்க நிர்வாகி காசி மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in