

பல்லடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருமணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (24). திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் பணிமனை நடத்தி வந்தார். இவர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டப்பிரிவுகளின் கீழ் அப்பாஸ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.