திருப்பூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா :

திருப்பூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா  :
Updated on
1 min read

திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த தனியார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தினர், அதே பகுதியை சேர்ந்த ஏராளமானோருக்கு தவணை முறையில் பெருமாநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் இடங்களை விற்பனை செய்துள்ளனர்.

இதனை நம்பி இடங்களை வாங்கியவர்களுக்கு, இதுவரை பத்திரம் கிரயம் செய்து தராமல் இழுத்தடித்து வருவதாக கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது ‘‘தனியார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தால் நாங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக, பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. எங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவேண்டும்’’ என்றனர்.

பாதிக்கப்பட்டவர்ளை சமரசம் செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in