ஜவ்வரிசி கலப்படம் கண்காணிப்பு குழுவில் விவசாயிகளை சேர்க்க வலியுறுத்தல் :

ஜவ்வரிசி உற்பத்தியில்  கலப்படத்தை தடுக்கக் கோரியும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகளையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி தலைமையிலான விவசாயிகள் நேற்று சேலம் ஆட்சியர் கார்மேகத்திடம்  மனு அளித்தனர்.

Updated on
1 min read

ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படத்தை தடுக்கவும், உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவில் விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புசெயலாளர் நல்லசாமி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில், ஜவ்வரிசிஉற்பத்தியில் கலப்படத்தைதடுப்பது, உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக, மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பணி நீண்ட காலம் தொடருவதற்கு, கண்காணிப்புக் குழுவில் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in