வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு : அபிராமம் அருகே கிராம மக்கள் எதிர்ப்பு

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு :  அபிராமம் அருகே கிராம மக்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே வழிமறிச்சான் கிராமம் வழியாக பரளையாற்றிலிருந்து பெரியானைக்குளம், விரதக்குளம், மேலக்கொடுமலூர் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய், குளங்களுக்கு வரும் வரத்து கால்வாயை ஒரு சிலர் ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றியுள்ளனர்.

மேலும் 10 மீட்டர் வரத்து கால்வாயை ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாயின் கரையை சேதப்படுத்தி, கால்வாயின் குறுக்கே சிமெண்ட் குழாய்கள் பதித்து பகிரங்கமாக ஆக்கிர மித்துள்ளனர்.

இதுகுறித்து விரதக்குளம் கிராம மக்கள் பலமுறை ஆக்கிரமிப்பாளரை எச்சரித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஆக்கிரமிப்பாளரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அபிராமம் காவல் சார்பு ஆய்வாளர் மகா லட்சுமி, வருவாய் ஆய்வாளர் முருகன், விஏஓ நாகமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று, கால்வாயை ஆக்கிரமித்த செய்யாமங்கலத்தைச் சேர்ந்த பெருமாள், அவரது மகன் திருமலைகண்ணன் ஆகி யோரிடம் விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ஓரிரு நாட் களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுவதாக ஆக்கிரமிப் பாளர்கள் உறுதி தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in