வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ல் மறியல் : அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ல் மறியல் :  அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர்மானம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்ததொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் விளக்கினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23, 24-ம் தேதி ஆகிய இருநாட்கள், மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டு, 25 ஆயிரம் துண்டறிக்கைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

ரயில் மறியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in