

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் சங்ககிரி அடுத்த தேவூர் அம்மாப்பாளையத்தில் புதியதாக காவல் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஏ.கே.விஸ்நாதன் ஆய்வு செய்தார்.
தேவூர் புதிய காவல் நிலையம் ரூ.1.04 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதன் தரம் குறித்து காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்து, காவல் நிலையத்துக்கு சுற்றுப்புற சுவர் அமைக்குமாறு பொறியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, சங்ககிரி இன்ஸ்பெக்டர் உட்பட பலர் உடனிருந்தனர்.