கோவை, திருப்பூர் மாவட்டங்களில் - மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நாளை நடக்கிறது :

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் -  மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நாளை நடக்கிறது :
Updated on
1 min read

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை (செப். 19) மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசிமுகாம் மாநிலம் முழுவதும்நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் மொத்தம் 1,475 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 685 பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாளை நடைபெறும் முகாமில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது,‘‘தற்போது 1.20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் இறுதியில், எவ்வளவு பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிய வரும்’’ என்றார். கோவைமாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது,“செப்டம்பர் 16-ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 3 ஆயிரத்து 84 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. மாநகரில் நாளை 266 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது” என்றனர்.

திருப்பூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in