திண்டிவனம், கோலியனூரில் - இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி :

திண்டிவனம், கோலியனூரில் -  இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி :
Updated on
1 min read

திண்டிவனத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி களுக்கு பாமகவினர் அஞ்சலி செலுத்தினர்.

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவகுமார் எம்எல்ஏ, மாநில அமைப்புச் செயலாளர் செல்வகுமார், மாநிலத் துணைத்தலைவர்கள் கருணாநிதி, ஏழுமலை, சங்கர் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சித்தணி, பாப்பனப் பட்டு, பனையபுரத்தில் உள்ள நினைவுத்தூண்களுக்கு பேராசிரி யர் தீரன், வன்னியர் சங்க மாநிலத்துணைத்தலைவர்கள் அன்புமணி, ஹரிஹரன் உள்ளிட் டோர் மலரஞ் சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து கோலி யனூரில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவுத்தூணுக்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்க ஜோதி, மாவட்ட செய லாளர் புகழேந்தி உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in