

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதிய கட்டிட கட்டுமானப் பணிக்காக, சக்தி மசாலா நிறுவனம் ரூ.2 கோடி வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில், மூன்று தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.14.5 கோடி மதிப்பில், 401 படுக்கைகள் கொண்டதாக இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடப் பணிக்காக, சக்தி மசாலா நிறுவனம் ரூ.2 கோடி வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, சாந்திதுரைசாமி, செந்தில் குமார்ஆகியோர் வழங்கினர். ரோட்டரி சங்கங்களின் முன்னாள் தலைவர் சகாதேவன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.