முன்னாள் ராணுவத்தினர் ஆலோசனைக் கூட்டம் :

முன்னாள் ராணுவத்தினர் ஆலோசனைக் கூட்டம் :
Updated on
1 min read

தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ நலத் திட்டத்தின் கீழ், கணேஷ்நகரில் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவமனையின் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கர்னல் மா.சுந்தரம் தலைமை வகித்தார். மருத்துவமனையின் பொறுப்பு அலுவலர் கேப்டன் அகஸ்டின் பேசும்போது, மருத்துவனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடை பெற்று வருவதால் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், மருத்துவ மனையின் பொது மருத்துவர் சுனிதா, பல் மருத்துவர் அகமது அன்வர், கட்டளை அதிகாரி ராஜகோபால் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in