

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும், அந்த ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு அருகில் 5 கி.மீ சுற்றளவு பகுதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் நாளான 16.10.2021 வரை அமலில் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல் துறை அலுவலரின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் காலம் முழுவதும் பிரச்சாரங் களுக்காக வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டிரக்குகள், டெம்போக் கள், கார்கள் உட்பட அனைத்து வகை வரையறுக்கப் படாத நடமாடும் வண்டிகளில் ஒலிபெரு க்கிகளை பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வேறுநபர்கள், ஒலிபெருக்கிகளைப் பயன்படு த்துவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரிகளிடம் அந்த வாகனங் களின் பதிவு எண், அடையாள எண்களை ஒப்படைக்க வேண்டும்.
எழுத்து மூலமான அனுமதி யின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் உள்ள வாகனம் மற்றும் வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் தொடர்புடைய கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.