பாளை. இளைஞர் கொலையில் தொடர்புடைய 4 பேர் நீதிமன்றத்தில் சரண், 3 பேர் கைது :

பாளை. இளைஞர் கொலையில் தொடர்புடைய 4 பேர் நீதிமன்றத்தில் சரண், 3 பேர் கைது :

Published on

பாளையங்கோட்டையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் வைகுண்டம் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.

பாளையங்கோட்டை சாந்தி நகர் காவலர் குடியிருப்பு மகதூம் மகன் அப்துல் காதர் (27). இவர், கடந்த 15-ம் தேதி இரவு பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே வைத்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சாத்தான்குளத்தில் கடந்த ஜூலை மாதம் பைனான்சியர் மார்ட்டின் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்க இந்தக் கொலை நடந்திருப்பது பாளையங்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் அப்துல் காதர் கொலை தொடர்பாக சாத்தான்குளத்தை சேர்ந்த சரவணன் மகன்பாலமுருகன் (22), வேலு பாண்டி மகன் செல்லப்பா (26), விலிபுத்தூரை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாதேஸ்வரன் (22), தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த வேலுசாமி மகன் காளியப்பன் (26) ஆகிய 4 பேர் நேற்று வைகுண்டம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், பின்னர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதித்துறை நடுவர் தமிழரசன் உத்தரவிட்டார்.

3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in