சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் : சேலத்தில் போலீஸார் நடவடிக்கை

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் :  சேலத்தில் போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

சேலத்தில் நேற்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

சேலம் கருங்கல்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் சிறுமிக்கு நேற்று திருமணம் நடக்க இருப்பதாக சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, கருங்கல்பட்டி திருமண மண்டபத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு 17 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணமக்களின் பெற்றோரை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் உடல் நலப்பிரச்சினை மற்றும் சட்ட பிரச்சினை குறித்து விளக்கினர்.

இதையடுத்து, இரு விட்டாரும் திருமணத்தை நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். மேலும், சிறுமியை மீட்டு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in