முதலை கடித்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் :

முதலை கடித்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் :
Updated on
1 min read

சிதம்பரம் அருகே உள்ளபழையநல்லூர் கிராமத் தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (65). விவசாயி.

இவர் திமுக கிளைக் கழக செயலாளராகவும் இருந்தார். கடந்த திங்களன்று இவர் ஊருக்கு அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை ஒன்று அவரை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது.

பழைய கொள்ளிடத்தில் கோபாலகிருஷ்ணனின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத் தனர்.

இந்நிலையில், கோபால கிருஷ்ணன் மனைவி கலாவதியிடம் முதல் கட்ட நிவா ரண தொகையாக ரூ. 50 ஆயிரத்தை கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in