சிதம்பரத்தில் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் இல்லத் திருமண விழா - முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்று வாழ்த்து :

சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன் இல்லத் திருமண நிகழ்வில், மணமக்கள் அரிசக்தி - சுகந்தி ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் முன்னாள் முதல்வர் பழனிசாமி.
சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன் இல்லத் திருமண நிகழ்வில், மணமக்கள் அரிசக்தி - சுகந்தி ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் முன்னாள் முதல்வர் பழனிசாமி.
Updated on
1 min read

அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம்தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான கே.ஏ.பாண்டியன்-குமராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பி. பூங்குழலி பாண்டியன், தம்பதியின் மகன் கே.ஏ.பி.அரிசக்திவேல், நெய்வேலி வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வள்ளலார் கல்வியியல் கல்லூரி நிறுவனர் என்.சுப்பிரமணியன் - ராமேஸ்வரி ஆகியோரின் மகளான எஸ்.சுகந்தி ஆகியோரின் திருமணம் சிதம்பரம் ஜி.எம் வாண்டையார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தாலி எடுத்து கொடுக்க, திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மணமக்கள் அவரிடம் ஆசிபெற்றனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “சிதம்பரம் சட்டமன்றஉறுப்பினர் கே. ஏ. பாண்டியன் - பூங்குழலி ஆகியோர் நல்ல உள்ளம் கொண்டவர்கள். இவர்களது மகன் திருமணத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. மணமக்கள் அரிசக்திவேல்- சுகந்தி ஆகிய இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்” என்றார்.இத்திருமண நிகழ்ச்சியில் புவனகிரிசட்டமன்ற உறுப்பினரும், கடலூர்மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அருண்மொழித்தேவன், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தர்மபுரி மாவட்ட அதிமுக செயலா ளரும் முன்னாள் அமைச்சருமான அன்பழகன், அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். எம்எல்ஏ பாண்டியன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in