கீழக்கரை அருகே நகைகள் திருட்டு :

கீழக்கரை அருகே  நகைகள் திருட்டு :
Updated on
1 min read

கீழக்கரை அருகே பெரியபாளையரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம்(60), விவசாயி.

கடந்த 12-ம் தேதி குடும் பத்துடன் ராமநாதபுரம் அருகேயுள்ள கவரங்குளம் கிராமத்துக்குச் சென்று விட்டார். பின்னர் 14-ம் தேதி திரும்பி வந்து வீட்டை திறந்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.2.50 லட்சம் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in