நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி நாளை (17-ம் தேதி) காலை 10.30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூபர்வைசர், கணக்காளர், காசாளர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் பணிவாய்ப்பு பெற்றவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அலுவலகத்திற்கு வரும் அனைவரும் தவறாது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in