பர்கூரில் பேரிடர் மீட்பு செயல்விளக்கப் பயிற்சி :

பர்கூர் அருகேயுள்ள போடிகுட்டை நீர்நிலையில் தீயணைப்புத்துறை சார்பில் தண்ணீரில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பான செயல் விளக்க பயிற்சி நடந்தது.
பர்கூர் அருகேயுள்ள போடிகுட்டை நீர்நிலையில் தீயணைப்புத்துறை சார்பில் தண்ணீரில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பான செயல் விளக்க பயிற்சி நடந்தது.
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பர்கூர் அடுத்த போடி குட்டை நீர் நிலையில் தீயணைப்பு மீட்புப் பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு பேரிடர் மீட்பு செயல் விளக்கப் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு பர்கூர் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமை வகித்தார்.

ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில் பருவ மழையின்போது நீர் நிரம்பி வருவதால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க நீரில் சிக்குபவர்களை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in