ரூ. 2,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது :

ரூ. 2,000 லஞ்சம் வாங்கியதாக  மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது :
Updated on
1 min read

: அவிநாசி மங்கலம் சாலை கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில், ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய பெண் உதவிப்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகரம் அவிநாசி சாலை அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கவுரி (45) என்பவர், அவிநாசியை அடுத்த ராக்கியாபாளையத்தில் வீடு கட்டுவதற்காக ஒருமுனை தற்காலிக மின் இணைப்பு கேட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்பு வழங்க, அவிநாசி கிழக்கு மின்வாரியப் பிரிவு அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய தில்ஷத்பேகம் (36) என்பவர் ரூ. 2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கவுரி புகார் அளித்தார்.

நேற்று மாலை ரசாயனம் தடவிய நோட்டுகளை அவிநாசி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் இருந்த தில்ஷத்பேகத்திடம் கவுரி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் வினோதினி தலைமையிலான குழுவினர் தில்ஷத்பேகத்தை கைது செய்தனர். மின்வாரிய அலுவலகத்தை பூட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், அங்கிருந்த பலரிடம் சோதனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in