

சேலத்தில் லாரியில் கடத்திய 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து கொண்டலாம்பட்டி போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் 150 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசியும், 20 மூட்டைகளில் அரிசி மாவும் இருந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சேலம் அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாயக்கண்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வம் லாரியை கொடுத்து ஓமலூரில் சூர்யா உள்ளிட்டோரிடம் இருந்து ரேஷன் அரிசியை எடுத்து வரச்சொன்னது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவான செல்வம், சூர்யா உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.