கண்டாச்சிபுரம் வட்டத்தில் - அடிப்படை அரசு அலுவலகங்கள் அமைக்க வேண்டும் :

கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு அடிப்படை அரசு அலுவலகங்கள் கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு அடிப்படை அரசு அலுவலகங்கள் கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
Updated on
1 min read

கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு அடிப்படை அரசு அலுவலகங்கள் கேட்டுஅப்பகுதி மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைமனு அளித்தனர்.

கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பது:

கடந்த 23.02. 2016-ல் தமிழக அரசு கண்டாச்சிபுரத்தை புதிய வட்டமாக அறிவித்தது. தற்போது கண்டாச்சிபுரம் தனி வட்டமாக செயல்பட்டு வருகிறது. இவ்வட்டத்திற்கு வட்டாட்சியர் அலுவலகம் தவிர்த்து மற்ற தேவையான அரசு அலுவலகங்களை 5 ஆண்டுகளை கடந்தும் அரசு அமைத்து தரவில்லை. அதனால் உடனடியாக அனைத்து அடிப்படை அரசு அலுவலகங்களும் அமைத்து தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்காக கண்டாச்சிபுரம் மகளிர் கூட்டமைப்பு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம், கோவில் நகர வியாபாரிகள் சங்கம், பாரத ஐயப்ப சேவா சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கார் வேன் ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் கடந்த 6-ம் தேதி கண்டாச்சிபுரதில் கையெழுத்து இயக்கம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in