வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் சிலையை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அதைக் கண்டித்தும், சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றக் கூடாது என வலியுறுத்தியும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் இளைஞரணி மாநில அமைப்பாளர் பெ.வைரவேல் தலைமை வகித்தார். அமைப்பின் நிறுவனர்- தலைவர் கே.கே.செல்வகுமார் கண்டன உரையாற்றினார். கொள்கை பரப்பு மாநிலச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில அமைப்பாளர் ப.ராஜா, மத்திய மண்டலச் செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in