

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 549 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை, தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்கள் மூலம், கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை குறித்து முகாமில் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். கலந்தாய்வில் 549 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.