விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நேர்காணல் :

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் -  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நேர்காணல் :
Updated on
1 min read

விழுப்புரத்தில் திமுகவில் உள்ளாட் சித் தேர்தலில் போட்டியிட விரும்பவர்களுடன் நேர்காணல் நடை பெற்றது.

விழுப்புரம் மத்திய மாவட்டதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுவோருக் கான நேர்காணல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடை பெற்றது. இந்நேர்காணலுக்கு வந்தவர்களை மாவட்ட செயலா ளரான எம்எல்ஏ புகழேந்தி வர வேற்றார்.

விழுப்புரம் மத்திய மாவட்டத்திற் குட்பட்ட 151 ஒன்றியக்குழு உறுப் பினர்கள், 16 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏலட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in