

தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் பணிபுரிய மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், இரவு காவலர், ஓட்டுநர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி, முன் அனுபவம், ஊதிய விவரங்களை tenkasi.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப் பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ‘மாவட்ட சமூகநல அலுவ லகம், பி/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங் கோட்டை, திருநெல்வேலி 627 002’ என்ற முகவரிக்கு வரும் 17-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அர்ரது நேரிலோ சமர்ப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.