புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 162 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in